உருகிடுமோ என் காதல் சின்னம் |
எழுத நினைத்து என் பேனாவை
துணைக்கழைத்தேன்
ஏற்கனவே களைத்திருந்த அது
' அய்யோ ஆரம்பிச்சிட்டியா' என்று சொல்லி
தப்பிக்க முயன்றது
பல வண்ணங்களில் காகிதத்தை
பகுத்தெடுத்து வானவில் கட்டி
செந்தமிழ் சொற்களை
அடுக்கடுக்காய் அதிலேற்றி
கற்கண்டே கனியமுதே
மல்லிகையே மரிக்கொழுந்தே
என உவமைகள் ஊற்றி
உன்னிடம் என் காதலைக் காட்ட
ஒரு கடிதம் உரைக்க நினைத்தேன்
சொற்களில் அடங்காத உன் அழகையும்
அளவிட்டு சொல்ல இயலா உன் அன்பையும்
எனை அரவணைத்து நீ நடக்கும் நினைப்பையும்
சொல்லி சொல்லி திளைத்திட எண்ணி
என் காகிதங்களை நெருங்கினேன்
மழையிலிட்ட வானவில்லாய் போன அது
வண்ணமெல்லாம் தேய்ந்தும் போனது
உனை எண்ணும் போதெல்லாம்
ஏனென்று தெரியவில்லை
என் கண்கள் எனை கேட்காமல்
கரைகிறது
கண்ணீரால் என் காகிதம்
நனைந்தும் போனது
'வழக்கம் போலவே இன்னிக்குமா
அட போப்பா' என வெறுத்துக் கொண்டது
என் பேனா....
2 comments:
Enna ore feelings aaa???
அடேய்! ஓணான்டிபுலவா உனக்கு பரிசும் கிடையாது ஒன்றும் கிடையாது உதைபதற்குள் ஒழுங்காய் ஓடிவிடு ..
பரிசு ஏன் உயிர் அண்ணன் பாஸ்கரனுக்கு தான் .
பலே! அண்ணாத்த பலே!
கவிதை ரியலி சூப்பர் :`).
Post a Comment