என்ன குற்றம் செய்தேன்
எல்லோருக்கும் நல்லவனாக இருக்க
நினைத்தது குற்றமா?
என்னை போதை பொருள் போல்
பார்த்தன ஒரு கூட்டம்
தேவைப்படும் போது உதவி மட்டும்
பெற்றுக் கொள்ள ஒரு கூட்டம்
வெளுத்ததைப் பால் என்று
எண்ணியது என் குற்றமா...
இல்லை கள்ளையும் பால் போல் படைத்த
கடவுள் குற்றமா
நட்பு மட்டுமே கள்ளமற்று வேண்டினேன்
கள்ளர்கள் மட்டுமே நட்பு பாராட்டினர்
ஏமாற்றும் அவர்களைச் சொல்வதா
இல்லை ஏமாறும் என்னை நோவதா
அன்று முதல் இன்று வரை அன்பு மட்டுமே நான் வேண்டியது...
அம்மா என்றால் அன்பு
நான் அறிய அதை நான் அதிகம் அனுபவித்ததில்லை
ராமனின் வன வாசம் பதினான்கு ஆண்டுகள்
எனக்கு..?
எண்ணி பார்த்தால் அவனை மிஞ்சி விட்டேன்
'நண்பர்கள் வருவதில்லை
பிறக்கின்றனர்'
சொன்னவனைக் காட்டிங்கள்
சுட்டு விடுகிறேன், சாகட்டும்...
ஒரு வேளை அவனுக்கு நல்ல
நண்பர் கூட்டமோ...
கடவுளின் அன்பை தாய் வழி தந்தான்
தாயின் பாசத்தை தோழன் தருவான்
எங்கேயோ படித்தது
பாவம் எவனோ உலகம் தெரியாதவன் எழுதியது
பூக்களை மட்டுமே நாம் வாங்க முடியும்
வாசம் அதுவாய் வந்தால் தான் உண்டு...
நான் போற்றிய உள்ளங்கள் கூட
எனை நிந்திக்கும் போது
உடைந்து போகிறேன்..
போதும் இந்த கொடுமை என
கோவில் சென்றேன் ஆருதல் தேடி..
இன்னிக்கு ஆடி வெள்ளி
அம்மன் வீதி உலா போயிருக்கா
கோவிலில் சொன்னார்கள்
அட கடவுளே
நீயுமா என்னை ஏமாற்றிச் சென்றாய்...
இனி நான் உயிர் கொண்ட பிணம்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment